Learning And Teaching

Paper 3
       
          Learning And Teaching
   பல்வகைத் தன்மை கொண்ட வகுப்பறைகளில் கற்பித்தல்
                
           பல்வகைமை உடைய வகுப்பில் பலதரப்பட்ட மாணவர்களது கற்றல் தேவைகளை நிறைவு செய்து வகையில் ஆசிரியர்களது கற்பித்தல் செயல்கள் அமைந்திட வேண்டும். அதாவது மாணவர்களது ஆற்றல்களை கொண்ட கற்பித்தல் முறையை ஆசிரியர் வகுப்பறையில் செயல்படுத்திட வேண்டும். எந்நிலையில் இருந்து வருபவர்களும் கற்கின்ற வகையில் வகுப்பறையை அமைத்தல் வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட வகுப்பறையில் கற்பித்தல் ஐந்து வகையில் காணப்படுகின்றன. அவை
   * கிராமம், நகரம்
               கிராமத்துப்பிள்ளைகளும், நகரத்துப்பிள்ளைகளும் வேறுபாடுன்றி
ஒன்றாக படிக்கின்ற வகையில் வகுப்பறையில் கற்பிப்பது ஆசிரியர் கடமையாகும்.
            கிராமப்புற மாணவனுக்குத் தெரியாத வார்த்தைகளைத் தெளிவுபடுத்தி நகர்ப்புற மாணவனுக்கு இணையாக வகுப்பறையை நடத்துதல் ஆசிரியரின் கடமையாகும். நகர்ப்புற, கிராம வேறுபாடுன்றி ஒரே நிலையில் கற்பிக்கின்ற நிலையில் உருவாக்குவதே பன்முகத்தன்மை தன்மை கொண்ட வகுப்பறையின் கடமையாகும்.
* சமூகப் பழக்கவழக்கங்களை பொதுவாக்கி கற்பித்தல்
                 இந்துக்களின் ஒரு பகுதியினர், பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். முசுலீம் குடும்பத்தின் ஒரு பகுதியினர் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது குறைவு. அனுப்பினாலும் பர்தா முறையை கடைபிடிக்கும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கற்பிப்பதே பன்முகத்தன்மை கொண்ட வகுப்பறையில் கற்பித்தல் ஆகும்.
   * பாலின வேறுபாடுன்றி கற்பித்தல் 
                பெண்களுக்கு ஆண்களைப் போலவே இணையான கல்வியை அளிக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் வற்புறுத்தி வந்தனர். குறைந்த பட்சம் கல்வியைக்கூடப் பெண்களுக்கு தராமல் பெற்றோர்களும்
குடும்பத்தினரும் அக் காலத்தில் மறுத்து வந்தனர். ஆனால் தற்பொழுது ஆண்களோடு பெண்களும்  சமமாக கற்றல் பன்முகத்தன்மை கொண்ட வகுப்பறையில் நடைபெறுகிறது.
* மொழி சார்பின்றிக் கற்பித்தல்
                  திருநெல்வேலி, மதுரை, கொங்குநாடு, ஆகிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பேசுகின்ற மொழித்தன்மை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவ்வாறின்றி அனைத்து மக்களும் ஒரே தன்மையில் புரிந்து கொள்கின்ற வகையில் பன்முகத்தன்மை கொண்ட வகுப்பறை பயன்படுகின்றது.
* உடல்நிலை, மனநிலை ஆகியவற்றில் வேறுப்பாடின்றிக் கற்பித்தல்
            நோயின்றி வாழ்தல் மட்டும் உடல் நலம் ஆகாது. வலுவான உடலும், மகிழ்ச்சியான மனமும், இணக்கமான சமூக உறவுகளும் பெற்று வாழ்கின்ற வகையில் கற்பித்தல் செய்தல் வேண்டும். நம்பிக்கை உணர்வை வளர்த்து சுமைகளற்ற மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உருவாக்குவதே, பன்முகத் தன்மை கொண்ட வகுப்பறையில் கற்பித்தல் முறையாகும்.
            

Comments

Popular posts from this blog

Understanding Discipline And Subjects

Contemporary India And Education