Gender School And Society

       Paper 6
      
    Gender School And Society
     பாலின தன்னடையாளமும், சமூக இயல்பினராக்கும் செயலும்
   பாலின தன்னடையாளம் பொருள்
                 பாலின தன்னடையாளம் என்பது குறிப்பிட்ட ஹார்மோன்களின் ஆதீனத்தின் காரணமாக தோன்றும் உள்ளார்ந்த உணர்வுகளின் அடிப்படையில் ஆண் அல்லது பெண் என உணர்தலோடு தனது நடத்தை மற்றும் நடையுடை பாவனைகள் மூலம் சமூகத்தில் உள்ள பிறரையும் அவ்வாறே உணரச்செய்தலாகும்.
வரையறை
            'சமூக இயல்பினராக்குதல் என்னும் செயல் மூலம் குழந்தையானது தான் சார்ந்துள்ள சமூக குழுவின் பண்பாட்டு கூறுகளை  கற்று தனித்தன்மை வாய்ந்த தனது ஆளுமையை உருவாக்கிக் கொள்ளகிறது.'
பாலின தன்னடயாளத்தை சமூக இயல்பினராக்கும் நடைமுறைகள்
குடும்பம்
     *    குடும்பமே ஒரு குழந்தையின் வளர்ச்சி பாதையில் தொடக்கமாக உள்ளது.
     *    குடும்பமே முதல் பள்ளிகூடமாகவும், தாயே முதல் ஆசிரியராகவும் விளங்குவதாக கல்வியாளர்களும், சமூகவியல் ஆளர்களும் கருதுகின்றனர்.
      *  குழந்தையின் தாய்மொழி யும் அதற்கு ஆண் தன்மை பெண் தன்மையின் இயல்புகளை கற்பித்து அக் குழந்தையை சமூக எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பாலினப்பொருத்தப்பாடுடை நடத்தையை மேற்கொண்டு தூண்டுகிறது.
           *    பாலினம் சார் நடத்தைகள் யும் பங்கு பணிகளையும் குழந்தையின் மூத்த உடன்பிறப்புகளும் சமூக இயல்பாக்கும் செயல்பாட்டில் குறிப்பிட்ட தக்க பங்கு வகிக்கிறது.
     * குழந்தையின் மூத்த உடன்பிறந்தவர்கள் பாலின சார் கற்பிதங்கள் சமூகத்தில் தொடர்ந்து வழி வழியாய் பின்பற்றுவதற்கு கருவியாக செயல்படுகின்றனர்.
பாலின தன்னடயாளத்தை பள்ளி மற்றும் கல்வி அமைப்பில் சமூக இயல்பாக்கும் நடைமுறைகள்:
             *    கல்வி நிறுவனங்கள் குழந்தைகளின் மனப்பாணமைகளை மாற்றி அமைப்பதன் மூலம் மாணவர்களின் புற நடத்தைகள் சமூகம் ஒப்புக்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கின்றன.
         *  வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் கற்றல் கற்பித்தல் சாதனங்களும் மாணவர்கள் பாலினம் சார் பங்கு பணிகளை கற்றிட உதவுகின்றன.
                எ. கா
           பள்ளிகளில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகள் பாலின பங்கு பணிகள் தொடர்பான கற்பிதங்களை மாணவர்களுக்கு கற்பிக்கவும் வலுப்படுத்தவும் பயன்படுத்த கூடிய முக்கிய கருவியாக விளங்குகிறது.
          * குழந்தைகள் தமது பாலின த்திற்கு ஏற்ப குறிப்பிட்ட வழிமுறைகளின் படி உடை உடுத்த வேண்டும். சிந்திக்க வேண்டும் என்னும் 3 களங்களில் கவனம் செலுத்துகின்றன.
           * பள்ளி அமைப்பு முறையில் கூட ஆண்களுக்கு அதிகாரம் மிக்க பதவிகளும், ஆண்களுக்கு உதவி புரியும் துணைப்பதவிகள் பெண்களுக்கு உரியவை என்னும் கருத்து வலுப்படுத்துவதவே அமைந்திருக்கிறது.
              * பள்ளி என்பதை பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு இரு பாலினத்தவரும் சம முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் சம வாய்ப்புகளை பெற தகுதி உடையவர்கள் என்பதை கற்பித்தல் க்கான முக்கிய சூழலை கொண்டிருந்தாலும் பள்ளிகள் அடிக்கடி பள்ளிக்கு வெளியே நிகழும் ஆண் தன்மை மற்றும் பெண் தன்மையோடு தொடர்பு கொண்ட சித்தரிப்புகளையே மாணவர்களிடம் வெளிப்படுத்துவதாக இருக்குறது.

Comments

Popular posts from this blog

Learning And Teaching

Understanding Discipline And Subjects

Contemporary India And Education