Learning And Teaching
Paper 3 Learning And Teaching பல்வகைத் தன்மை கொண்ட வகுப்பறைகளில் கற்பித்தல் பல்வகைமை உடைய வகுப்பில் பலதரப்பட்ட மாணவர்களது கற்றல் தேவைகளை நிறைவு செய்து வகையில் ஆசிரியர்களது கற்பித்தல் செயல்கள் அமைந்திட வேண்டும். அதாவது மாணவர்களது ஆற்றல்களை கொண்ட கற்பித்தல் முறையை ஆசிரியர் வகுப்பறையில் செயல்படுத்திட வேண்டும். எந்நிலையில் இருந்து வருபவர்களும் கற்கின்ற வகையில் வகுப்பறையை அமைத்தல் வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட வகுப்பறையில் கற்பித்தல் ஐந்து வகையில் காணப்படுகின்றன. அவை * கிராமம், நகரம் கிராமத்துப்பிள்ளைகளும், நகரத்துப்பிள்ளைகளும் வேறுபாடுன்றி ஒன்றாக படிக்கின்ற வகையில் வகுப்பறையில் கற்பிப்பது ஆசிரியர் கடமையாகும். ...